தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 12, 2020, 9:34 AM IST

ETV Bharat / sports

ஒருநாள் போட்டியில் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்தியா?

இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தர்மசாலாவில் தொடங்கவுள்ளது.

IND vs SA, 1st ODI: Bruised India look to mend reputation against resurgent South Africa
IND vs SA, 1st ODI: Bruised India look to mend reputation against resurgent South Africa

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டி காக் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தர்மசாலாவில் தொடங்கவுள்ளது.

சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்து மோசமான ஃபார்மில் உள்ளது. மறுமுனையில், தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று சிறப்பான ஃபார்மில் உள்ளது.

இதனால், இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேசமயம், காயத்திலிருந்து மீண்டு நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா இப்போட்டியில் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் கம்பேக் தருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா

இவ்விரு அணிகள் இதுவரை 84 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் தென் ஆப்பிரிக்க அணி 46 போட்டிகளிலும், இந்திய அணி 35 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஏனைய மூன்று போட்டிகள் முடிவு எட்டப்படாமல் முடிந்துள்ளது. இதனிடையே, உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால், இப்போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என தகவல் வெளியானது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இன்று 1.30 மணியளவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிப்பரப்பாகிறது.

இந்திய அணி விவரம்:விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, விராட் கோலி, கேஎல் ராகுல், மனீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், சாஹல், பும்ரா, சைனி, குல்தீப் யாதவ், சுப்மன் கில்.

தென் ஆப்பிரிக்க அணி விவரம்:டி காக் (கேப்டன், விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா, வான் டர் டூசேன், டூபிளெசிஸ், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், ஜே.ஜே ஸ்மட்ஸ், அன்டில் ஃபெலுக்வாயோ, லுங்கி இங்கிடி, லுதோ சிபாம்லா, பியூரான் ஹென்ட்ரிக்ஸ், அன்ரிச் நோர்டே, ஜார்ஜ் லின்டே, கேசஷ் மகராஜ், கைல் வெரியன்.

இதையும் படிங்க:ஐபிஎல் டிக்கெட் விற்பனையை தடைசெய்ததா மஹாராஷ்டிரா?

ABOUT THE AUTHOR

...view details