இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால், தொடரை உயிர்ப்புடன் வைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஷமி, குல்தீப் ஆகியோருக்கு பதிலாக சைனி, சாஹல் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரையில் சுழற்பந்துவீச்சாளர்கள் இஷ் சோதி, சாண்ட்னர் ஆகியோருக்கு பதிலாக அறிமுக வீரர் கைல் ஜேமிசன், மார்க் சேப்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.