நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இத்தொடரின் இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்திலுள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
மேலும் இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் எந்தவித மாற்றமுமின்றி களமிறங்குகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதாலவது டி20 போட்டியில் கே.எல். ராகுல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது அதிரடியினால் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
அதேபோல் நியூசிலாந்து அணியிலும் கப்தில், வில்லியம்சன், மன்ரோ, டெய்லர் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்முடன் இருப்பதால் இன்றைய ஆட்டத்திலும் நியூசிலாந்து அணி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.