இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. இதில் நேற்று முன்தினம்(மார்ச்.12) நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதற்கிடையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (மார்ச்.14) தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான், சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் ஆகியோருக்குப் பதிலாக அறிமுக வீரர்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.