தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

2ஆவது டெஸ்ட்: சதமடித்து அசத்திய ரோஹித்; வலிமையான நிலையில் இந்தியா!

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை குவித்துள்ளது.

Ind vs Eng: Rohit's glorious drive appreciated by fans and Kohli
Ind vs Eng: Rohit's glorious drive appreciated by fans and Kohli

By

Published : Feb 13, 2021, 2:29 PM IST

சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவருகிறது.

இதில் முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 106 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் கேப்டன் விராட் கோலி, தொடக்க வீரர் சுப்மன் கில் ஆகியோர் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றினர். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்.

அதன்பின் நடைபெற்ற இரண்டாம் செஷனில் ரோஹித் 80 ரன்களுடனும், ரஹானே 5 ரன்களுடனும் களமிறங்கினர். தொடர்ந்து அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஏழாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

நிலைத்து நின்று ஆடிய ரோஹித் மற்றும் ரஹானே இணை எதிரணியின் பந்துவீச்சை பவுண்டரிகளாக மாற்றி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதன் காரணமாக முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்தியா மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 189 ரன்களை எடுத்தது.

இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா 132 ரன்களுடனும், அஜிங்கியா ரஹானே 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த இணை நிலைத்து நின்றால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இமாலய ரன் குவிப்பை நிகழ்த்தும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: செர்பியா, ரஷ்யா, உக்ரைன் நாடுகளுடன் இந்திய மகளீர் கால்பந்து அணி விளையாடுகிறது!

ABOUT THE AUTHOR

...view details