இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெறும் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 400 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்தார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.