இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்த மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இப்போட்டியானது இரண்டு நாள்களிலேயே முடிவடைந்ததால், மைதானத்தின் தன்மை குறித்த கேள்விகள் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியது.
அதிலும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் மைதானத்தின் தகுதியை ஆராய வேண்டும் என ஐசிசியிடம் வேண்டுகொள் விடுத்தனர். ஆனால் ஐசிசி நான்காவது டெஸ்ட் போட்டியும் இதுபோல் அமைந்தால் மைதானத்தின் தன்மை குறித்து ஆராய்வதாக தெரிவித்தது.