தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் தொடரில் ஆர்ச்சர் பங்கேற்பது சந்தேகம்? - ஐபிஎல் 14

இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஒருநாள் மற்றும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம்தான் என அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

IND vs ENG: Injured Jofra Archer could miss ODI series and IPL 14
IND vs ENG: Injured Jofra Archer could miss ODI series and IPL 14

By

Published : Mar 21, 2021, 4:53 PM IST

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர். தனது அசுர வேக பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட செய்யும் இவர், சம காலத்தில் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக வர்ணிக்கப்படுகிறார்.

இந்நிலையில், இந்திய அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியின்போது ஜோஃப்ரா ஆர்ச்சர் முழங்கை பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்று அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய மோர்கன், "இப்போட்டியின்போது ஜோஃப்ரா ஆர்ச்சர் காயமடைந்துள்ளார். அவரது காயம் தீவிரமடைந்துள்ளதால், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பாரா? என்பது சந்தேகம்தான். அதேபோல் வரவுள்ள ஐபிஎல் தொடரிலும் ஆர்ச்சர் பங்கேற்பாரா என்பதும் சந்தேகம்தான்" என்று தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஜோஃப்ரா ஆர்ச்சர், அந்த அணியின் மிகப்பெரும் பலமாக கருதப்படுகிறார். இதுவரை 35 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்ச்சர், 46 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இதையும் படிங்க: சர்வதேச டி20 அரங்கில் சாதனை படைத்த மாலன்!

ABOUT THE AUTHOR

...view details