இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 5ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இருநாட்டு அணி வீரர்களும் இன்று (ஜனவரி 27) சென்னைக்கு வருகைதரவுள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சில்வர்வுட், "சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரிலிருந்து எங்களுக்கு ஒன்று தெளிவாக புரிந்தது. அது என்னவென்றால் இந்திய அணியை வெல்வது கடினமான ஒன்று. இது நிச்சயம் எங்களுக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கும். எங்களால் அவர்களை வீழ்த்த முடியுமா? என்று கேட்டால் என்னுடைய பதில் நிச்சயம் எங்களால் முடியும். ஆனலும் இத்தொடர் முகவும் கடினமானது.