இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டில் பிப்ரவரி 05ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக இருநாட்டு வீரர்களும் கடந்த புதன்கிழமை (ஜன.27) சென்னைக்கு வந்து, தனியார் நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் முன்னாதாகவே சென்னைக்கு வந்த இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், பேட்ஸ்மேன் ரோரி பர்ன்ஸ், ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர், தங்களது தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துள்ளனர். இதையடுத்து இவர்கள் மூவரும் இன்று (ஜன.30) சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.