இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட், ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 12ஆம் தேதிமுதல் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இத்தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.
இதில், இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் இடம்பிடித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக பந்துவீசுவதை நிறுத்திய பாண்டியா, இங்கிலாந்து தொடருக்கான பயிற்சியின்போது பந்துவீசும் காணொலியை வெளியிட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா பயிற்சியில் ஈடுபடும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இந்திய டி20 அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், இஷான் கிஷன், யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ராகுல் தேவதியா, நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப் சைனி, ஷார்துல் தாக்கூர்.
இதையும் படிங்க:ஐசிசி மகளிர் தரவரிசை: டாப் 10இல் மூன்று இந்திய வீரங்கனைகள்