அகமதாபாத்:குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று (மார்ச் 12) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
இப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்ததன் மூலம் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால், சர்வதேச கிரிக்கெட்டில் தனது 100ஆவது போட்டியில் களமிறங்கினார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சிக் காத்திருந்தது. தொடக்க வீரர் கே.எல். ராகுல் ஒரு ரன்னிலும், கேப்டன் விராட் கோலி ரன் ஏதுமின்றியும், ஷிகர் தவான் 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ரன்களுக்குள் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின், ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் - ஸ்ரேயாஸ் ஐயர் இணை ஒருசில பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஸ்டோக்ஸ் வீசிய பந்தை சிக்சர் அடிக்க முயற்சித்து பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.