இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 328 ரன்களை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்திருந்தது.
இதையடுத்து, இலக்கை நோக்கி இந்திய அணியில் ரோஹித் சர்மா - சுப்மன் கில் இணை களமிறங்கியது. இதில் இந்திய அணி 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் நான்காம் நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இன்று (ஜன.19) தொடங்கிய ஐந்தாம் நாள் ஆட்டத்தின் சிறிது நேரத்திலேயே இந்திய அணியின் ரோஹித் சர்மா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் - புஜாரா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் அரைசதம் கடந்து அசத்தினார்.