இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் ஜனவரி 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும் இப்போட்டி பிங்க் டெஸ்ட் போட்டி என்றும் அழைக்கப்படுகிறது.
இதற்கான காரணம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ரத்தின் புற்றுநோய் அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் முயற்சியாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த பிங்க் டெஸ்டை முன்னெடுத்துள்ளது. மெக்ரத், மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009 முதல் சிட்னி மைதானத்தில் இந்த பிங்க் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து சிட்னியில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பச்சை நிற தொப்பிக்கு பதிலாக பிங்க் நிற தொப்பியை அணி விளையாடினர். இப்போட்டியில் இந்திய அணி போராடி டிரா செய்தது.