பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இப்போட்டியின்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி தனது எட்டாவது ஓவரை வீசிக்கொண்டிருக்கும்போது, அவரது இடுப்பு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் 7.5 ஓவர்களை வீசியிருந்த அவர் போட்டியின் பாதியிலேயே மைதானத்திலிருந்து வெளியேறினார். இதையடுத்து அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சைனி வீசிய ஓவரின் கடைசி பந்தை இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா வீசினார்.