இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாம் நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி 274 ரன்களுடன் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது.
களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இந்த ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 369 ரன்களுக்கு இன்னிங்ஸை நிறைவு செய்தது.
இதில் இந்திய அணியின் அறிமுக வீரர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், நடராஜன் தங்கராசு தலா மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் இந்திய அணியின் வீரர்கள் ரோஹித் சர்மா - சுப்மன் கில் முதல் இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் சுப்மன் கில் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஸ்டீவ் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்குத் திரும்பினார்.