இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று (ஜன.07) தொடங்கியது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்கப்படுவது வழக்கமான ஒன்று.
அதன்படி இன்று இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கையில் வேகப்பந்து பந்துவீச்சாளர் முகமது சிராஜ், தன்னை மீறி கண் கலங்கினார். பின்னர் கைகளால் கண்ணீரைத் துடைத்துக்கொண்ட சிராஜ் உற்சாகமாக விளையாடத் தொடங்கினார்.
இந்நிலையில் தேசிய கீதத்திற்கு கண்கலங்கிய சிராஜின் காணொலி சமூக வலைதளங்களில் வைராலகத் தொடங்கியது. தாய்நாடு மீதான பற்றை இந்த சம்பவம் பறைசாற்றுவதாக பலரும் சிராஜுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.