இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள அஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர்களாக வில் புகோவ்ஸ்கி - டேவிட் வார்னர் இணை களமிறங்கியது.
இதில் டேவிட் வார்னர் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக இடக்கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் (193) படைத்துள்ளார். இப்பட்டியலில் இலங்கை சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 191 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.