இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இரண்வாது ஒருநாள் போட்டி நடந்துவருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 340 ரன்கள் எடுத்தது. இதில் ஷிகர் தவான் 96 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு 341 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அப்போது இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கு பேட்டிங்கின்போது வலதுபக்க விலா எலும்பில் காயம் ஏற்பட்டதால், ஃபீல்டிங் செய்ய களமிறங்கமாட்டார் என பிசிசிஐ சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக சுழற்பந்துவீச்சாளர் சாஹல் ஃபீல்டிங் செய்து வருகிறார்.