இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான மூன்று நாள் பயிற்சி ஆட்டம் இன்று சிட்னியில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதனபடி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ப்ரித்வி ஷா, சுப்மன் கில் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்ற மளித்தனர். அதன் பின்னர் வந்த ஹனுமா விஹாரியும் 15 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.
இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் ரஹானே - சட்டேஸ்வர் புஜாரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கொரை உயர்த்தியது. மேலும் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினார். தொடர்ந்து விளையாடி வந்த புஜாரா 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.