2008ஆம் ஆண்டு முதல்முதலாக ஐபிஎல் தொடர் தொடங்கியபோது சென்னை அணிக்காக பார்த்திவ் படேல் விளையாடினார். அப்போது நடந்த சம்பவங்கள், இறுதிப் போட்டி அனுபவம், தோனி பற்றிய நினைவுகள் என பல்வேறு விஷயங்கள் பற்றி பார்த்திவ் படேல் பேசியுள்ளார்.
அதில், ''சிஎஸ்கே அணியின் டீம் மீட்டிங் இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருந்ததில்லை. 2008ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியின்போது இரண்டு நிமிடங்கள் மட்டுமே டீம் மீட்டிங் இருந்தது. 2019ஆம் ஆண்டு இறுதிப் போட்டியிலும் சென்னை அணியின் டீம் மீட்டிங் இரண்டு நிமிடங்கள்தான் இருந்திருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. தோனிக்கு எப்போதும் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். ஒவ்வொரு வீரரின் பங்கு குறித்து அவர்களே தெரிந்துகொள்ளும் வகையில் தோனி செயல்படுவார். அதனால்தான் சென்னை அணி ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக வலம்வருகிறது.