இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தனியார் கிரிக்கெட் தளத்திற்கு அளித்த பேட்டியில், இந்திய கிரிக்கெட் அணி, உலகக்கோப்பைத் தொடர், வில்லியம்சன் என பல்வேறு விஷயங்கள் பற்றி தனது கருத்தைக் கூறியுள்ளார்.
அதில், சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் வீரராக அறியப்படும் விராட் கோலியிடமிருந்து கேப்டன்சி பதவியைப் பிரித்து கொடுப்பது இந்திய கிரிக்கெட்டிற்கு சரியாக இருக்காது. அந்த விஷயத்தை விராட் கோலி விரும்பமாட்டார்.
இங்கிலாந்து அணியின் இயன் மோர்கன், ஜோ ரூட் போன்ற வீரரல்ல விராட். என்னைப் பொறுத்தவரையில் ஒரே பயிற்சியாளர் இல்லாமல் இரு பயிற்சியாளர்களை நியமிக்க பிசிசிஐ ஆலோசிக்கலாம். அது நிச்சயம் இந்திய அணிக்கு பயனளிக்கும்.
இந்திய அணி உலகக்கோப்பைத் தொடரில் அரையிறுதியோடு வெளியேறியதற்கு நான்காவது இடத்தில் ஆடும் வீரரை சரியாக தேர்வு செய்யாததுதான். ஏனென்றால் இந்தியாவில் பல திறமையான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் சரியான வாய்ப்புக் கொடுக்காமல் தேர்வுக் குழுவினர் சோடை போயுள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் வில்லியம்சன்தான் எனக்கு பிடித்த கேப்டன். அவர் நியூசிலாந்து அணியின் முகத்தை மாற்றி வருகிறார். உலகக்கோப்பைத் தொடரில் தொடர் நாயகன் விருது வாங்கும்போது நானா என்ற கேட்டக் கேள்வி அவரது குணத்தை வெளிப்படுத்தியது. சொந்த மண்ணில் விராட் கோலியை வீழ்த்தியது, முக்கிய வீரர்களின் விக்கெட்டை சரியாகக் கணக்கிட்டு வீழ்த்தும் நுணுக்கம் என வில்லியம்சன் ஜாம்பவான் வீரராக வளர்ந்து வருகிறார்'' என்றார்.
இந்திய அணிக்கு இருவேறு பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கருத்தை இதற்கு முன்னதாக யுவராஜ் சிங் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மெஸ்ஸி ஸ்டைலில் ஃப்ரீகிக் கோல் அடிக்கும் சிறுவன்!