உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில் அனைத்து நாட்டு தலைவர்களும் அந்தந்த நாட்டு பொது இடங்களில் மக்கள் கூடவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். இதனால் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ரசிகர்களின்றி நடந்துவருகிறது.
இதனிடையே மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பாக, விளையாட்டுப் போட்டிகளை ரத்து செய்வது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் மைதானங்களில் ரசிகர்கள் கூடுவதை நிச்சயம் தவிர்க்கலாம். எனவே ரசிகர்களை மைதானத்திற்குள் அனுமதிக்காமல் அனைத்து விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தலாம் என பிசிசிஐ உள்ளிட்ட விளையாட்டு அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் அடுத்ததாக இந்தியாவில் 14ஆம் தேதி நடக்கவுள்ள ஐஎஸ்எல் தொடரின் இறுதிப்போட்டிக்கும், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிக்கும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறியமுடிகிறது.