தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

' இன்னொரு தோனி கிடைப்பது கடினம் ' - கங்குலி - DHoni

தோனியைப் போன்ற திறமையான வீரர் மிக விரைவில் கிடைப்பது மிகவும் கடினம் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

Dhoni
Dhoni

By

Published : Dec 29, 2019, 1:57 PM IST

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்குப் பின், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி எந்த ஒரு போட்டிகளிலும் விளையாடாமல் உள்ளார். இதனால், தோனி இனி விளையாடுவாரா இல்லை... ஓய்வு பெறுவாரா என்ற குழப்பம் ரசிகர்களுக்கு நீண்ட நாட்களாகவே இருக்கிறது.

கங்குலி

இதனிடையே தோனியின் எதிர்காலம் குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து தன்னிடம் அடுத்த ஆண்டு ஜனவரி வரை கேட்க வேண்டாம் எனத் தோனி தெரிவித்தார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிசிசிஐ தலைவர் கங்குலி தோனியின் எதிர்காலம் குறித்து கூறுகையில்,

"தோனி தனது எதிர்காலம் குறித்து நிச்சயம் கேப்டன் கோலி மற்றும் தேர்வுக்குழுத் தலைவர்களிடமும் நிச்சயம் பேசியிருப்பார். அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பது அவருடைய முடிவு. அது பற்றி எனக்குத் தெரியாது. அதைப் பற்றி நான் அவரிடம் பேசவில்லை. ஆனால், தோனி ஒரு சாம்பியன் வீரர். அவர் இந்திய அணியின் முழுமையான சாம்பியன் வீரர் என்பதில் சந்தேகமே இல்லை. இந்திய அணிக்குத் தோனி போன்ற திறமையான வீரர் கிடைப்பதெல்லாம் கடினம். ஆனால், அவர் விளையாட விரும்புகிறாரா... இல்லையா என்பது அவரது முடிவில்தான் உள்ளது" என்றார்.

இதையும் படிங்க:ஆஸ்திரேலியாவின் ஒருநாள் அணியின் கேப்டனாக தேர்வான தோனி..!

ABOUT THE AUTHOR

...view details