தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சர்வதேச மகளிர் டி20 தரவரிசை : ஷஃபாலி வர்மா மீண்டும் முதலிடம் - ஷஃபாலி வர்மா

இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மா பெண்கள் டி20 தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச மகளிர் டி20 தரவரிசை : ஷஃபாலி வர்மா மீண்டும் முதலிடம்
சர்வதேச மகளிர் டி20 தரவரிசை : ஷஃபாலி வர்மா மீண்டும் முதலிடம்

By

Published : Mar 30, 2021, 10:23 PM IST

துபாய்:கடந்த வாரம் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய மகளிர் அணியின் இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா, தென்னாப்பிர்க்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், 30 பந்துகளில் 60 ரன்கள் குவித்ததால் 26 புள்ளிகளைப் பெற்று, 776 புள்ளிகளில் உள்ளார். இவர் ஆஸ்திரேலியாவின் பெத் மூனியை விட 35 புள்ளிகள் முன்னிலை வகிக்கிறார்.

இந்திய வீர்ர ஸ்மிருதி மந்தனா ஆறாவது இடத்திற்கும், கேப்டன் சூனே லூஸ் 37ஆவது இடத்திற்கும், நியூசிலாந்தின் ஆமி சட்டர்த்வெய்ட் 27ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், இந்தியா தரப்பில் ராஜேஸ்வரி கெயக்வாட் 13ஆவது இடத்திற்கும், அருந்ததி ரெட்டி 56ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா - நியூசிலாந்து ஆகிய மகளிர் அணிகளுக்கு இடையில் சமீபத்தில் நடந்த டி20 போட்டிகளுக்கு பிறகு இத்தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஐபிஎல் 2021: டெல்லி அணியின் புதிய கேப்டன் ரிஷப் பந்த்

ABOUT THE AUTHOR

...view details