தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

யு-19 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் வரலாற்றின் பக்கங்கள்! - India meet Pakistan in first semi-final

யு-19 உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில்  இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில், இரு அணிகளும் முன்னதாக உலகக்கோப்பைத் தொடரில் ஆடியது பற்றிய வரலாற்றுப் பக்கங்கங்கள்

icc-u19-world-cup-fancied-india-meet-pakistan-in-first-semi-final
icc-u19-world-cup-fancied-india-meet-pakistan-in-first-semi-final

By

Published : Feb 4, 2020, 9:08 AM IST

2020ஆம் ஆண்டுக்கான யு-19 உலகக்கோப்பைத் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்துவருகிறது. இதன் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர்கள் ஆடப்படாத நிலையில், ஐசிசி தொடர்களில் மட்டும் இரு அணிகளும் எதிர்த்து ஆடி வருகின்றன. இதனால் இன்றையப் போட்டிக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி

இந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

சீனியர் அணியில் இதுவரை உலகக்கோப்பைத் தொடர்களில் இந்தியா அணியை பாகிஸ்தான் வென்ற வரலாறு இல்லை. யு-19 தொடரைப் பொறுத்தவரை உலகக்கோப்பைத் தொடர்களில் 9 போட்டிகளில் ஆடியுள்ளது. அதில் பாகிஸ்தான் அணி நான்கு போட்டிகளிலும், இந்திய அணி ஐந்து போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

கேப்டன் ப்ரியன் கார்க்

அரையிறுதியில் இரண்டு முறை பாகிஸ்தானை எதிர்த்து ஆடியுள்ள இந்திய அணி, இரண்டிலும் வெற்றிபெற்றுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடிய ஆட்டங்கள் பற்றிய விவரம்:

  • யு-19 உலகக்கோப்பை 1988 - இந்திய vs பாகிஸ்தான் - 68 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி.
  • யு-19 உலகக்கோப்பை 1998 - இந்திய vs பாகிஸ்தான் - 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.
  • யு-19 உலகக்கோப்பை 2002 - இந்திய vs பாகிஸ்தான் - 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி.
  • யு-19 உலகக்கோப்பை 2004 (அரையிறுதி) - இந்திய vs பாகிஸ்தான் - 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி.
  • யு-19 உலகக்கோப்பை 2006 (இறுதிப்போட்டி) - இந்திய vs பாகிஸ்தான் - 38 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி.
  • யு-19 உலகக்கோப்பை 2010 (காலிறுதிப் போட்டி) - இந்திய vs பாகிஸ்தான் - 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி.
  • யு-19 உலகக்கோப்பை 2012 (காலிறுதிப் போட்டி) - இந்திய vs பாகிஸ்தான் - 1 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.
  • யு-19 உலகக்கோப்பை 2014 - இந்திய vs பாகிஸ்தான் - 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.
  • யு-19 உலகக்கோப்பை 2018 (அரையிறுதிப் போட்டி)- இந்திய vs பாகிஸ்தான் - 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.

இதையும் படிங்க: ‘ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்வதே எனது குறிக்கோள்’ - பி.வி. சிந்து

ABOUT THE AUTHOR

...view details