தமிழ்நாடு

tamil nadu

கடைசி பந்தில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா!

By

Published : Jan 24, 2020, 2:15 PM IST

கிம்பர்லி: யு19 உலகக்கோப்பைத் தொடரின் 16ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

icc-u-19-world-cup-australia-knock-england-out-in-a-last-ball-thriller
icc-u-19-world-cup-australia-knock-england-out-in-a-last-ball-thriller

யு19 உலகக்கோப்பைத் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதன் 16ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி ஆடியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி பென் சார்லஸ்வொர்த், டான் மவுஸ்லி ஆகியோரின் சிறப்பாக ஆட்டத்தில் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பென் சார்லஸ்வொர்த் 82 ரன்களை எடுத்தார்.

பின்னர் 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர் ஜேக்கை 11 ரன்களில் இழந்தது. தொடர்ந்து கேப்டன் ஹார்வி - சாம் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சாம் 31 ரன்களில் ஆட்டமிழக்க, லாச்லன் ஹார்னுடன் இணைந்து ஹார்வி ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

ஹார்வி 65 ரன்களிலும், லாச்லன் 45 ரன்களிலும் ஆட்டமிழக்க ஆட்டம் பரபரப்பானது. 43.2 ஒவர்களில் ஆஸ்திரேலிய அணி 189 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி 40 பந்துகளில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 64 ரன்கள் தேவைப்பட, சல்லி - முர்ஃபி ஆகியோர் அதிரடியாக ஆடினர்.

கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி சார்பாக எவிசன் பந்து வீசினார். இந்த ஓவரில் மூன்றாவது பந்தில் பவுண்டரி செல்ல, நான்காவது பந்தில் ஒரு ரன்னும், ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்களும் எடுக்கப்பட்டது. இதனால் கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்கவேண்டிய நிலையில், எளிதாக 1 ரன் எடுத்து ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதையும் படிங்க: ‘கோலி எனக்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியமே இல்லை... ஆனாலும் அளித்தார்’ - ஸ்டீவ் ஸ்மித் ஷேரிங்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details