இன்று ஐசிசி சர்வதேச டெஸ்ட் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடம் வகித்து வந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் விளையாடிய மோசமான ஃபார்ம் காரணமாக இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதேபோல் இரண்டாமிடலித்திருந்த ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். மேலும் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்றாமிடத்திலிருந்த ஆஸ்திரேலிய அணியின் லபுசாக்னே நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்தப்பட்டியலில் இந்திய அணியின் ரஹானே ஒரு இடம் முன்னேறி எட்டாம் இடத்திலும், புஜாரா ஒன்பதாவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் இரு இடங்கள் முன்னேறி பத்தாவது இடத்தைப்பிடித்து அசத்தியுள்ளார்.