சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலிலும் இந்திய அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று (பிப்.17) டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில்,
பேட்டிங் தரவரிசை
பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் 2 இடங்கள் முன்னேறி 11ஆவது இடத்தையும், ரோஹித் சர்மா 9 இடங்கள் முன்னேறி 14ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இப்பட்டியலில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம் சன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுசாக்னே ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை தக்கவைத்துள்ளனர்.