இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (பிப்.09) முடிவடைந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசைப் பட்டியலை இன்று (பிப்.10) வெளியிட்டுள்ளது. சென்னை டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், இப்பட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு இடம் பின்தங்கி 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இப்பட்டியலில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாம் இடத்திலும் நீடித்து வருகின்றனர்.