'டெஸ்ட் கிரிக்கெட்டின் பெருஞ்சுவர்' என்றழைக்கப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட். இவர் இந்திய அணிக்காக 164 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 13 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்திடாத மாபெரும் சாதனை ஒன்றையும் நிகழ்த்தியவர் இவரே. அச்சாதனையானது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 31 ஆயிரம் பந்துகளை எதிர்கொண்ட முதல் வீரர் என்பது தான். இதனை நினைவுகூரும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்தப் பதிவில், 'சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் இதுவரை 31,258 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். வேறு எந்த கிரிக்கெட் வீரரும் டெஸ்டில் இதுவரை 30,000 பந்துகளை கடந்தது கிடையாது. இதன் மூலம் டிராவிட் தனது ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் சராசரியாக 190.6 பந்துகளை எதிர்கொண்டுள்ளார்.#ஐசிசிஆல்ஆஃப் ஃபேம்' என்று பதிவிட்டுள்ளது.
இவருக்கு அடுத்தபடியாக 'கிரிக்கெட்டின் கடவுள்' சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் 29,437 பந்துகளை எதிர்கொண்டு இரண்டாமிடத்திலும், முன்னாள் தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜாக்ஸ் காலிஸ் 166 டெஸ்ட் போட்டிகளில் 28,903 பந்துகளை எதிர்கொண்டு மூன்றாமிடத்திலும் உள்ளனர்.
இதையும் படிங்க: புதிய விதிமுறைகளுக்கு பாக் வீரர்கள் சிறப்பாக ஒத்துழைக்கிறார்கள் - முஷ்டாக் அகமது!