ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒருநாள் போட்டிக்கான வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளிட்டுள்ளது. இப்பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 870 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
அவரைத் தொடர்ந்து, இந்திய அணியின் ரோஹித் சர்மா 842 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் 837 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும், நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் 818 புள்ளிகளுடன் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன ஃபின்ச் 791 புள்ளிகளைப் பெற்று ஐந்தாமிடத்திற்கு முன்னேறியுள்ளார்.