கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு காரணமாக பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட்டாலும், பார்வையாளர்களின்றியே போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தாண்டு இறுதியில் டி20 உலகக்கோப்பைத் தொடர் நடத்த ஐசிசி திட்டமிட்டிருந்தது.
டி20 உலகக்கோப்பைத் தொடர் நடத்துவது குறித்து ஐசிசி சார்பாக மே 28ஆம் தேதி நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பைத் தொடர் 2022ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதனைடுத்து, ஒருவேளை இத்தொடர் 2020ஆம் ஆண்டு நடைபெறும் பட்சத்தில், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பைத் தொடரை ஆஸ்திரேலியாவும், 2020ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரை இந்தியாவும் நடத்த வேண்டியிருக்கும்.