தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்ட ஐசிசி! - ஐசிசி வெளியிட்ட விதிமுறைகள்

தற்போதைய சூழல் சரியான பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும்போது வீரர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

ICC issues guidelines for resumption of cricket
ICC issues guidelines for resumption of cricket

By

Published : May 23, 2020, 2:28 PM IST

கரோனா வைரஸ் பெருந்தொற்று மனிதர்களின் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. கரோனாவுக்குப் பிறகான உலகம் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த உலகில் பல மாற்றங்கள் இருக்கும் என்பது மட்டுமே தெரியும். இப்பெருந்தொற்றால் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழல் சரியான பிறகு போட்டிகள் தொடங்கும்போது வீரர், வீராங்கனைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அந்தந்த விளையாட்டைச் சேர்ந்த சம்மேளனங்கள் வெளியிட்டுவருகின்றன. இந்நிலையில், கரோனா வைரஸ் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கும்போது வீரர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.

அதில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் இதோ:

  1. நடுவர்கள், வீரர்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்
  2. வீரர்கள் நடுவர்களிடமும், சக அணி வீரர்களிடமும் தொப்பி, கண்ணாடி, துண்டு ஆகியவற்றை ஒப்படைக்கக் கூடாது
  3. பந்துவீச்சாளர்களிடம் பந்தைத் தரும்போதும், அவர்களிடமிருந்து பந்தை வாங்கும்போதும் நடுவர்கள் கையுறைகளைப் பயன்படுத்த வேண்டும். பந்துகளைப் பளபளக்கச் செய்ய வீரர்கள் பந்துகளில் எச்சில் பயன்படுத்தினால் கரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவ்வாறு எச்சிலைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது
  4. எச்சிலுக்கு மாறாக வீரர்கள் வழக்கம்போல் பந்தைப் பளபளக்கச் செய்ய வியர்வையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  5. வீரர்கள் பந்தைத் தொட்டதற்குப் பிறகு, தங்களது கைகளைக் கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
  6. மேலும் பந்தை தொட்ட பிறகு அவர்கள் தங்களது முகம், கண்கள், மூக்கு, வாய் ஆகிய உறுப்புகளைத் தொடக்கூடாது.
  7. பயிற்சியின்போதும் வீரர்கள் ஒருவருக்கொருவர் குறைந்தது 1.5 மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்
  8. சர்வதேச அணிகள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விமானத்தில் பயணிக்கும்போது வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து இருக்கைகளில் அமர்வதைப் பரிசீலிக்க வேண்டும்
  9. அதேபோல வெளிநாடுகளில் நடைபெறும் தொடரில் பங்கேற்கும்போது மருத்துவருடன் பயணம் செய்வதை சர்வதேச அணிகள் கடுமையாகப் பரிசீலிக்க வேண்டும்
  10. கிரிக்கெட் விளையாடும் நாடுகள் தங்கள் அரசாங்கம் வெளியிட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன

இதையும் படிங்க:பயிற்சியின்போது வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன...? - ஹாக்கி இந்தியா அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details