தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

நடக்குமா? நடக்காதா? - டி20 உலகக்கோப்பை குறித்த இறுதிமுடிவு நாளை! - ஐ.சி.சி தலைவருக்கான தேர்தல்

டெல்லி: டி20 உலகக்கோப்பை தொடரை நடத்துவது குறித்த இறுதிமுடிவு ஐசிசி சார்பில் நாளை நடைபெறவுள்ள கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

world
world

By

Published : Jun 9, 2020, 4:06 PM IST

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்திருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரை இந்தாண்டு அக்டோபர் 18ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா அச்சம் காரணமாக போட்டிகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் நாளை (ஜூன் 10ஆம் தேதி) நடைபெறும் கூட்டத்தில் டி20 உலகக்கோப்பை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமில்லாமல், ஐசிசி தலைவருக்கான தேர்தல் செயல்முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பார்வையாளர்களின்றி டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றாலும், நீண்ட நாள்களுக்குப் பிறகு களத்திலிறங்கும் தங்களது ஆதர்ச நாயகர்களின் ஆட்டத்தை டிவியில் காண ரசிகர்கள் தயாராகவே உள்ளனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக உலகக்கோப்பை போட்டிகளைக் காண தாங்கள் ஆவலாக இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details