தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 10, 2020, 2:03 AM IST

ETV Bharat / sports

கரோனாவுக்கு பின் கிரிக்கெட்டில் அமலுக்கு வரும் ஐசிசி விதிமுறைகள்!

கரோனாவுக்கு பின் கிரிக்கெட் போட்டிகளில் அமலுக்கு வரவுள்ள விதிமுறைகளை ஐசிசி அறிவித்துள்ளது.

icc-approves-saliva-ban-introduces-covid-19-replacements-in-tests
icc-approves-saliva-ban-introduces-covid-19-replacements-in-tests

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கரோனா வைரசால் கிரிக்கெட்டில் சில விதிமுறைகள் அமல்படுத்தப்படவுள்ளது. அந்த விதிமுறைகளை ஐசிசி தலைமை நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

  • டெஸ்ட் போட்டியின் போது கரோனா அறிகுறிகளைக் காண்பிக்கும் வீரர்களை மாற்றுவதற்கு அணிகள் அனுமதிக்கப்படும். இந்த விதிமுறை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு செல்லாது.
  • பந்துகளில் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டிகளின் ஆரம்பத்தில் சில முறை உமிழ்நீர் பயன்படுத்தலாம். தொடர்ச்சியாக உமிழ்நீர் பயன்படுத்தினால் அணிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கப்படும். இரண்டு முறைக்கு மேல் எச்சரிக்கை கொடுக்கப்பட்டால், 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும். உமிழ்நீர் பயன்படுத்திய ஒவ்வொரு முறையும், நடுவர்கள் பந்தினை சுத்தம் செய்ய வேண்டும்.
  • டிஆர்எஸ் விதிமுறைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸிக்கு ஒவ்வொரு அணிக்கும் இரண்டு முறை டிஆர்எஸ் வாய்ப்பும், டெஸ்ட் போட்டிகளுக்கு மூன்று முறையும் வழங்கப்படும்.
  • அடுத்த 12 மாதங்களுக்கு ஜெர்சி சின்னங்களில் விதிகளை தளர்த்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details