நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பராக வலம் வந்தவர் இயன் ஸ்மித். இவர் நியூசிலாந்து அணிக்காக 63 டெஸ்ட் மற்றும் 98 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்ரும் இவர் நியூசிலாந்து அணியின் 112 சர்வதேச போட்டிகளுக்கு வர்ணனையாளராக செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட்டிற்கு ஸ்மித் செய்த சேவையை பாராட்டி பெர்ட் சுட்க்ளிஃப் பதக்கம் வழங்கி கவுரவிப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.