தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 2, 2020, 4:52 PM IST

ETV Bharat / sports

டெஸ்ட் போட்டிகளின் நாட்கள் குறைக்கப்படுவதை வெறுக்கிறேன்: கிளென் மெக்ராத்!

சிட்னி: டெஸ்ட் போட்டிகளை நான்கு நாட்களாக குறைக்கும் நடவடிக்கைகளை வெறுப்பதாக ஆஸ்திரெலிய ஜாம்பவான் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

i-would-hate-to-see-test-cricket-get-any-shorter-glenn-mcgrath
i-would-hate-to-see-test-cricket-get-any-shorter-glenn-mcgrath

ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளை நான்கு நாட்களாக குறைப்பதற்கு ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தீவிரமாக ஆலோசனை நடத்திவருகிறது. இந்த நடவடிக்கை கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளென் மெக்ராத் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ’’நான் அதிகம் பாரம்பரியங்களைப் பின்பற்றுபவன். அதனால் இப்போது எவ்வாறு டெஸ்ட் போட்டிகள் நடக்கிறதோ, அவ்வாறே டெஸ்ட் போட்டிகள் நடக்கவேண்டும். ஐந்து நாட்களாக நடந்துவரும் டெஸ்ட் போட்டிகள் நான்கு நாட்களாக குறைக்கப்படுவதை நான் வெறுக்கிறேன். டெஸ்ட் போட்டிகளை மக்களிடையே கொண்டு செல்வதற்காகத்தான் பிங்க் டெஸ்ட், பகலிரவு போட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதுபோன்ற ஆரோக்கியமான நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஆதரவிளித்தோம். ஆனால் டெஸ்ட் போட்டிகளின் நாட்கள் குறைக்கப்படுவதை என்றும் ஏற்றுக்கொள்ளமுடியாது’’ என்றார்.

பிங்க் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய வீரர்களுடன் மெக்ராத்

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் டெஸ்ட் போட்டிகளின் நாட்கள் குறைக்கப்படுவதற்கு கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 2019 கிரிக்கெட்: சாதனைகளும்... வேதனைகளும்...!

ABOUT THE AUTHOR

...view details