தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பந்தை எதிர்கொள்ள சற்று பயமாக இருந்தது - விராட் கோலி! - டேல் ஸ்டெயின்

ஐந்து மாதங்களுக்குப் பின் வலைப்பயிற்சியின் போது பந்தை எதிர்கொண்டது சற்று பயமாகத்தான் இருந்தது என ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

'I was scared': Virat Kohli on first net session after lockdown
'I was scared': Virat Kohli on first net session after lockdown

By

Published : Aug 30, 2020, 4:23 PM IST

ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக எட்டு அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கடந்த வாரம் சென்றது.

இந்நிலையில், ஒவ்வொரு அணியைச் சேர்ந்த வீரர்களும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் பயிற்சியை தொடங்கியுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், யுஷ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் நதீம் உள்ளிட்ட பலரும் இன்று (ஆக.30) வலைப்பயிற்சி மேற்கொண்டனர்.

முதல் நாள் பயிற்சி குறித்து விராட் கோலி கூறுகையில், ” கரோனா காரணமாக ஐந்து மாதங்களுக்குப் பிறகு இன்றுதான் நான் பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டேன். பயிற்சியில் பந்தை எதிர்கொள்ளும் போது சிறிது பயமாகத்தான் இருந்தது. இருந்தாலும் எதிர்ப்பார்த்ததைவிட சிறப்பாகவே பயிற்சி முடிந்தது.

இருப்பினும், கரோனா ஊரடங்கு காலத்தில் உடற்பயிற்சியை வழக்கமாகச் செய்து வந்ததால், என்னால் பயிற்சியில் ஈடுபடும் போது சிரமத்திற்குள்ளாகவில்லை. மாறாக நீண்ட நேரம் வரை பயிற்சியில் ஈடுபட முடிந்தது. ஒட்டுமொத்தத்தில் எங்களின் முதல் நாள் பயிற்சி சிறப்பாகவே அமைந்தது’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:காணொலி மூலம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா!

ABOUT THE AUTHOR

...view details