தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'நான் சச்சினைப் போல் விளையாட நினைக்கிறேன்' - ப்ரித்வி ஷா!

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் ப்ரித்வி ஷா, தனது ரோல் மாடல் சச்சின் டெண்டுல்கரைப் போன்று விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

I try to play like Sachin sir, he is God of cricket: Shaw
I try to play like Sachin sir, he is God of cricket: Shaw

By

Published : Apr 21, 2020, 8:55 PM IST

கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக இம்மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர், தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்களும் தங்களது நேரத்தை குடும்பத்தினருடனும், சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தும் கழித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஐபிஎல்லின் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, தனது அணி வீரர்களைத் தேர்வு செய்து அவர்களுடன், இன்ஸ்டாகிராம் நேரலையில் நேர்காணல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் இந்திய அணியின் இளம் நட்சத்திரம் ப்ரித்வி ஷா பங்கேற்று, ’தான் சச்சினை போல் விளையாட ஆசைப்படுகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்தி ப்ரித்வி ஷா கூறுகையில், "கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் எனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். நான் எட்டு வயதில் இருந்தபோது அவரை முதலில் சந்தித்தேன். அவர் எப்போதும் என்னிடம் இயல்பான விளையாட்டை விளையாடும் படி கூறியுள்ளார். சூழ்நிலைக்கு ஏற்ப களத்தில் அமைதியாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.

என்னுடைய ஆரம்பக் காலங்களில், நான் எனது பயிற்சியாளர்களின் ஆலோசனைப்படி அடிக்கடி, எனது பேட்டிங் ஸ்டைலை மாற்றிக் கொண்டிருந்தேன். ஆனால், சச்சின் என்னிடம், உனது பேட்டிங் ஸ்டைலை மாற்ற வேண்டாம் என்று கூறினார். அவர் கூறியபடி செயல்பட்டதன் மூலமாகவே, நான் தற்போது இந்த அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளேன்.

நான் எனது 17 வயதில் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் அறிமுகமானேன். அப்போது நான் பங்கேற்ற எனது அறிமுகப் போட்டியிலேயே சதமடித்ததன் மூலம், சச்சினின் சாதனையை சமன் செய்திருந்தேன். அச்சமயத்தில் மக்கள் என்னை சச்சினுடன் ஒப்பிட்டு கூறியதும் எனக்கு அழுத்தம் அதிகரித்தது.

ஆனால், நான் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்கிறேன். நான் அவரைப் போல விளையாட முயற்சி செய்து வருகிறேன்'' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:'வனவிலங்குகளைக் காப்பாற்ற கையெழுத்திடுங்கள்' - பீட்டர்சன் வேண்டுகோள்!

ABOUT THE AUTHOR

...view details