இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, சக வீரரான பும்ராவை சிறந்த பவுலர் என பலமுறை பாராட்டியுள்ளார். அதேபோல, கோலி சிறந்த பேட்ஸ்மேன் என பும்ராவும் கோலியை புகழ்ந்துள்ளார். இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது.
இதில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களை சேர்த்தது. இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 87 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்துள்ளது. இப்போட்டியில், இந்திய பந்துவீச்சாளர் பும்ரா ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து அசத்தலான பந்துவீசிய அவர், இதுவரை ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
குறிப்பாக, அவரது பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரரான ஜான் காம்பெல், ரிஷப் பண்ட் வசம் கேட்ச் தந்து ஆவுட்டானார். பும்ராவின் பந்துவீச்சைக் கண்டு பிரமித்த கோலி, ’மனுஷன் என்ன மாதிரி பவுலிங் போட்றான் பாருயா’ என ரசிகனை போல் கத்திய வீடியோ ஸ்டெம் மைக்கில் பதிவாகியுள்ளது. (What a bowler man, What a bowler)
இது ஒருபுறம் இருக்க, பும்ரா ஹாட்ரிக் விக்கெட் எடுக்க முக்கிய காரணமே கோலிதான். ஆம், பும்ரா வீசிய பந்து ரோஸ்டன் சேசின் காலில் பட்டதும் மற்ற வீரர்கள் எல்லாம் எல். பி. டபள்யூ-விற்கு அப்பிள் செய்தனர். ஆனால், நடுவர் அவுட் தர மறுத்துவிட்டார்.