ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று டி20, நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி வருகிற 27ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இந்திய ஒருநாள், டெஸ்ட் அணிகளில் தேர்வுசெய்யப்பட்டுள்ள இளம் வீரர் சுப்பன் கில்லின் நேர்காணலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.
அதில் பேசிய சுப்மன் கில், "நான் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். ஏனெனில் இது என்னுடைய முதல் பயணம். இளம் வீரராக வளர்ந்துவரும் நான், இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டிகளை எப்போதும் பார்த்துள்ளேன். ஆனால் இப்போது நான் அங்கு சென்று விளையாடவுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.