தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'எந்தவொரு ஆட்டத்திலும் இப்படி ஒரு நிகழ்வை நான் பார்த்ததில்லைய்யா' - சர்ச்சை ரன் அவுட் குறித்து கோலி! - ஜடேஜாவுக்கு வழங்கப்பட்ட ரன் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்ட ரன் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

I have never seen this happen
I have never seen this happen

By

Published : Dec 16, 2019, 11:04 AM IST

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

அதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி, 48ஆவது ஓவரின் போது ரன் எடுக்க முயன்ற ஜடேஜாவை, ரோஸ்டேன் சேஸ் ரன் அவுட் ஆக்கினார். எனினும், இதை கள நடுவர் ஏற்கவில்லை. அதேநேரத்தில் ஜடேஜா எல்லை கோட்டைத் தொடாமல் இருந்தது தொலைக்காட்சி ரீப்ளேவில் தெரிய வந்தது.

அது மைதானத்தில் இருந்த பெரிய திரையிலும் ஒளிபரப்பானது. அதனைக் கவனித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட், நடுவரிடம் முறையிட்டார். இதையடுத்து மூன்றாவது நடுவர் தலையிட்டு ஜடேஜாவுக்கு அவுட் வழங்கினார்.

இது தொடர்பாக போட்டி முடிந்த பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, மைதானத்துக்கு வெளியே தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருப்பவர்கள், கள நடுவரின் முடிவில் எப்படி தலையிட முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், எந்தவொரு போட்டியிலும் நான் இவ்வாறு நடந்ததைக் கண்டதில்லை எனவும், நடுவர்களும், மேட்ச் ரெப்ரீயும் அந்த நிகழ்வை மீண்டும் பார்க்க வேண்டும் என்றும் கோலி வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரத்தில், ஆட்டமுடிவில் பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட், ரன் அவுட் முடிவில் சரியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'ஒரேயொரு நிமிடம்தான் அந்த உரையாடல் நடந்திருக்கும்!’ - சச்சினுக்கு ஆலோசனை வழங்கிய ஓட்டல் ஊழியர்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details