கிரிக்கெட்டில் வெல்வதற்குப் பேட்டிங், பந்து வீச்சோடு சேர்த்து ஃபீல்டிங்கும் சிறப்பாக இருக்க வேண்டும். ஒரு ரன், இரண்டு ரன்களில் வெற்றியைத் தீர்மானிக்கும் போட்டிகளில் ஃபீல்டிங் பெரும் பங்கு வகிக்கும். 90களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் ஃபீல்டிங்கின் முக்கியத்துவம் பற்றி அறிய வைத்தவர், தென் ஆப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ்.
ஜான்டி ரோட்ஸ் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜாவை, தற்போது சிறந்த ஃபீல்டராக இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார். இவருடன் இந்திய அணியின் ரெய்னா இன்ஸ்டாகிராமில் உரையாடினார். அதில் இப்போதைய வீரர்களின் ஃபீல்டிங் பற்றி பேசப்பட்டது.
அதில், ''இந்திய அணியின் ஜடேஜா மிகச்சிறந்த கேட்ச்களை பிடித்துள்ளார். அதற்கு உறுதியுடன் இருப்பதும், எப்போது வேண்டுமானாலும் பந்து நம்மிடம் வரும் என விழிப்போடு காத்திருப்பதும் மட்டுமே, ஜடேஜா சிறப்பாக ஃபீல்டிங் செய்வதற்கு முழுமையான காரணம்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஃபீல்டிங்கின் முக்கியத்துவம் என்னால் மாறவில்லை. எனது ஃபீல்டிங்கிற்கு பிறகு அனைவரும் ஃபீல்டிங்கால் ஏற்படும் மாற்றத்தைக் கண்டுகொண்டனர்.