விளையாட்டுப் போட்டிகளில் மன அழுத்தமின்றி மன உறுதியோடு இருப்பதற்காக MFORE என்ற நிறுவனத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் தொடங்கியுள்ளார். இதற்கு ஆதரவளிக்கும் வகையில் விளையாட்டுகளிலும் வாழ்க்கையிலும் மன உறுதி எந்த அளவிற்கு முக்கியம் என்பது பற்றி கேப்டன் கூல் தோனி பேசியுள்ளார்.
அதில், '' இந்தியாவில் மன அழுத்தம் ஏற்படுவதை ஒத்துக்கொள்வதில் அனைவருக்கும் ஒரு தயக்கம் உள்ளது. அதனை நாங்கள் மன நோய் எனக் கூறுவோம். நான் ஒவ்வொரு முறை பேட்டிங் களமிறங்கும்போதும் முதல் 5 முதல் 10 பந்துகளை எதிர்கொள்ளும் போது பதற்றம் அதிகமாக இருக்கும். கொஞ்சம் பயமும் இருக்கும். சிலருக்கு அதிகமாகவே இருக்கும்.
இது ஒரு சின்ன விஷயம்தான். ஆனால் நாம் இதனை பயிற்சியாளர்களிடம் சொல்வதற்கு அதிகமாக தயக்கம் காட்டுவோம். இதனை ஈடுசெய்வதற்கு பயிற்சியாளருக்கும் வீரருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்க வேண்டும்.