தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'நான் தான் விராட் கோலி' - வார்னர் மகளின் செல்ல சேட்டை! - david warner daughter

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ் மேனான டேவிட் வார்னரின் இளைய மகளின் குறும்புத்தனமான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

David Warner's little daughter

By

Published : Nov 10, 2019, 5:58 PM IST

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வருபவர் டேவிட் வார்னர். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வார்னர் இன்று தனது வீட்டில் இளைய மகளான இன்டி ரேவுடன்(INDI RAE) கிரிக்கெட் விளையாடிய வீடியோவை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரின் அந்தப் பதிவில் , ' எனக்கு இது பற்றி சரியாக தெரியாது. இன்டி விராட் கோலி போல் ஆக வேண்டுமாம்' எனப் பதிவிட்டு அவரின் மகள் கிரிக்கெட் விளையாடும் வீடியோவையும் இணைத்துள்ளார்.

'நான் தான் விராட் கோலி' எனச் சொல்லி அடிக்கும் இன்டி ரே வார்னர்

தற்போது டேவிட் வார்னர் மகளின் வீடியோவானது கிரிக்கெட் மற்றும் விராட் கோலி ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க: சச்சினின் 30 வருட சாதனையை முறியடித்த 15 வயது இளம் இந்திய வீராங்கனை

ABOUT THE AUTHOR

...view details