பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இரண்டு அரையிறுதிப் போட்டிகள் நேற்றும் (மார்ச் 17) இறுதிப் போட்டி இன்றும் நடைபெற இருந்ததது. இந்நிலையில், கரோனா வைரஸால் இந்தத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
கோவிட் -19 வைரஸ் பீதியால் இந்தத் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்தவுடன், இதில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் தங்களது நாட்டிற்கு திரும்பினர். அதில், இங்கிலாந்து அணியின் அதிரடி கிரிக்கெட் வீரரான அலெக்ஸ் ஹேல்ஸுக்கு கோவிட் -19 வைரஸ் அறிகுறி இருப்பதால்தான் பி.எஸ்.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமிஸ் ராஜா தெரிவித்திருந்தார்.
இது குறித்து அலெக்ஸ் ஹெல்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
"கோவிட் -19 வைரஸ் தொற்றால் பி.எஸ்.எல் தொடரில் பங்கேற்ற மற்ற வெளிநாட்டு வீர்ரகளை போலவே நானும் எனது தாய்நாட்டிற்கு சென்றேன். வீட்டைவிட்டு ஆயிரம் மைல்களை தள்ளியிருப்பதை விட குடும்பத்துடன் இருப்பதே முக்கியமாக எண்ணினேன். நான் சனிக்கிழமை இங்கிலாந்துக்கு சென்றடைந்த போது எனக்கு உடல்நிலை சீராக இருந்தது. ஆனால், அதற்கு அடுத்த நாள் எனக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால், சுயமாக என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டேன்.
இந்த தருணத்தில், எனக்கு கோவிட் -19 வைரஸ் இருப்பதாக செய்திகள் வெளியாவதை மறுக்கிறேன். கோவிட் -19 வைரஸ் தொற்று பரிசோதனை செய்து கொள்வது என்பது சாத்தியமற்ற ஒன்று. ஆனால், இன்றே பரிசோதனை செய்து கொள்வேன் என் நம்பிக்கை உள்ளது. பிறகுதான், என் உடல்நிலை குறித்த விவரங்கள் தெரியவரும்" என்றார்.
இந்த சீசனில் கராச்சி கிங்ஸ் அணிக்காக ஏழு போட்டிகளில் விளையாடிய அலெக்ஸ் ஹேல்ஸ் 239 ரன்கள் அடித்தார்.
இதையும் படிங்க:திட்டமிட்டப்படி ஆடவர் டி20 உலகக்கோப்பை நடைபெறும் - ஐசிசி!