கரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலும் இத்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரரான புஜாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் வலைபயிற்சியில் பேட்டிங் செய்த புகைப்படத்தை வெளியிட்டார். மேலும் இந்த ஊரடங்கு உத்தரவால் நான் கிரிக்கெட் விளையாடுவதைத்தான் மிகவும் மிஸ் செய்தேன் என பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, இந்த புகைப்படத்தைக் கண்ட சக வீரர் ஷிகர் தவான், நீங்கள் பயிற்சி மேற்கொள்வதை பார்த்தால் நீங்கள் கிரிக்கெட்டை மிஸ் செய்ததைபோல் தெரியவில்லையே என சிரிக்கும் ஸ்மைலியுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் அடித்தார்.
இன்ஸ்டாகிராமில் புஜாராவை ட்ரோல் செய்த தவான்! தவானின் இந்த நகைச்சுவை கமெண்டிற்கு இந்திய பந்துவீச்சாளர் உமேஷ் யாதவும் சிரிக்கும் ஸ்மைலியை பதிவிட்டார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் ஏலத்தில் விலை போகாத புஜாரா, இங்கிலாந்தின் கவுன்டி கிரிக்கெட் தொடரில் கிளவ்செஸ்டர்ஷயர் அணிக்காக விளையாடவிருந்தார். ஆனால், கரோனா வைரஸ் காரணமாக இங்கிலாந்தில் நடைபெறவிருந்த அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் மே 28ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால், அணியின் நிதி நெருக்கடியை சமாளிக்கும் விதமாக புஜாராவின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்திய அணிக்காக இதுவரை 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா 18 சதங்கள் உள்பட 5,840 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கோலியிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன்’ - ஹனுமா விஹாரி