தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ராவல்பிண்டி மைதானத்தின் பெயர் மாற்றம்: அக்தரை கௌரவித்த பிசிபி!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரின் சாதனைகளை கருத்தில் கொண்டு, ராவல்பிண்டியிலுள்ள கே.ஆர்.எல். மைதானத்தின் பெயரை சோயிப் அக்தர் கிரிக்கெட் மைதானம் என பெயர் மாற்றம் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Humbled and honoured: Shoaib Akhtar after Rawalpindi stadium is renamed after him
Humbled and honoured: Shoaib Akhtar after Rawalpindi stadium is renamed after him

By

Published : Mar 14, 2021, 7:42 PM IST

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்புயலும், ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என்ற புனைப்பெயருக்குச் சொந்தக்காரருமாக திகழ்பவர் சோயிப் அக்தர். மேலும், கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக பந்துவீசிய நபர் என்ற சாதனையையும் சோயிப் அக்தர் தன்வசம் வைத்துள்ளார்.

இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 46 டெஸ்ட், 163 ஒருநாள், 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சோயிப் அக்தர், 400க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக சோயிப் அக்தர் நிகழ்த்திய சாதனைகளை கருத்தில் கொண்டு, ராவல்பிண்டியிலுள்ள கே.ஆர்.எல். கிரிக்கெட் மைதானத்தின் பெயரை, சோயிப் அக்தர் கிரிக்கெட் மைதானம் எனப் பெயர் மற்றம் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா!

ABOUT THE AUTHOR

...view details