கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இச்சூழலில் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு பிடித்தமான செயல்களில் தங்களது கவனத்தை திருப்பியுள்ளனர்.
அந்த வரிசையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தன்னை சுய தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். மேலும் அவர், அவ்வபோது தனக்கு பிடித்தமான செயல்களை செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகிறார்.